மாற்றம் - ஏற்று கொள்
இரவை படைத்து நிலவை படைத்தது
சிறு நீரை படைத்து பனித்துளி உருவாக்கினாய்...
பகலை படைத்து அதே பனித்துளியை மறைய செய்தாய்..
விதையை படைத்து செடியை படைத்தது
அழகான மலரை உருவாக்கினாய்...
பின் அதை உதிரவும் செய்தாய்...
கடற்கரையில் மணலை படைத்து ரசிக்கும் மனதை படைத்து ,
ஓர் சிறிய மணல் வீட்டை படைத்தாய்
பின் வேகமான அலையாய் நீயே அதை அள்ளி சென்றாய்.
இவை அனைநித்தையும் படைத்த நீ..
ஏன் இதயத்தை படைத்தாய்..அதில் மாற்றத்தை ஏற்க மறுக்கும் மனதை படைத்தாய் !!!!
மனமே - மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது ...
கற்று கொள் !!! ஏற்று கொள் !!!
வியக்க வைக்கும் கதிரவன்
ஒரு மழை காலத்தில் நானும் நீயும் கை கோர்த்து நடந்ததை
பார்க்க முடியாமல் வெட்கத்தில் மேகம் எடுத்து தன் முகத்தை மூடிய அதே கதிரவன் தான்
இன்று நான் தனிமையில் வாடும் வேலையில் சுட்டெரித்து
என் கண்ணீருக்கும் வியர்வைக்கும் வித்யாசம் தெரியாமல் வியக்க வைக்கிறான்..
விளையாட்டு
ஏதோ ஒன்று நம்மை இணைக்க,
நாம் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம்.
யாரோ ஒருவர் வந்து அந்த ஆட்டத்தை கலைக்க
அதை தாங்கி கொள்ள முடியாமல் தவிக்கிறோம்
இதை தான் விதியின் விளையாட்டு என்று கூறுவார்களோ..
இதில் யார் ஜெயிப்பது யார் தோற்பது ???
Comments are always welcome. If any mistakes do share it with me. All the Best and bye till I see you in my next blog.